Monday, August 20, 2018

ஸ்ரீ நாம ராமாயணம்




இராமாயணமானது வால்மீகி என்னும் முனிவரால் வடமொழியில்(சமஸ்கிருதமொழி) இயற்றப்பட்ட மிகப் பழைய இதிகாசமாகும். மூல நூலான வால்மீகியின் இராமாயணத்தைத் தழுவிப் பல இந்திய பிராந்திய மொழிகளிலும், பிற நாடுகளின் மொழிகளிலும் இராமாயணம் இயற்றப்பட்டுள்ளது. "கவிச்சக்கரவர்த்தி" கம்பர்  இதனைத் தமிழில் எழுதினார்.
இராமாயணம் என்னும் பெயர் இராமன்,அயனம் என்னும் சொற்களின் கூட்டாகும். அயனம் என்னும் சொல் சமஸ்கிருதத்தில் பயணம் என்னும் பொருளுடையது. இதனால், இராமாயணம் என்பது "இராமனின் பயணம்" என்னும் பொருள் குறிக்கிறது.
வால்மீகி இராமாயணம் 24,000 பாடல்களைக் கொண்டது. இவை மொத்தம் ஏழு காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.  இராம நாம மகிமை

உலகிலேயே உயர்ந்த நாமம் ஸ்ரீ ராமநாமம்
"ராமா"என்று ஒருமுறை கூறினால் செய்த பாவங்கள் தீர்ந்து விடும்.

"நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே ராமவென்ற யிரண்டெழுத்தினால்"

என்னும் பாடல் இரண்டெழுத்து மந்திரமாகிய ராம நாமத்தின் மகிமையை விளக்குகிறது.
ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி இலங்கையை நோக்கி சீதையை மீட்க செல்வதற்காக வானரங்கள்(குரங்குகள்)பாலம் அமைத்துக் கொண்டிருந்தனர். எல்லா வானரங்களும் கற்களைத் தூக்கி கடலுக்குள் போட்டன.
ஒவ்வொரு கல்லும் மற்றொரு கல்லின் மீது சரியாக அமர்ந்தது. அனுமன் அந்தப் பணியை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தார் மனதிற்குள் ராமநாமத்தை ஜபித்த படியிருந்தார்.
ராமபிரானும் இதை கவனித்துக் கொண்டிருந்தார். அவர் மனதிலும்  ஆசை ஏற்பட்டது. நாமும் இந்த வானரங்களுடன் இணைந்து கல்லைத் தூக்கிப் போட்டால் என்ன எனக் கருதியபடியே ஒரு கல்லை எடுத்து கடலுக்குள் போட்டார். அந்தக்கல் சரியாக மற்ற கற்களின் மீது அமரவில்லை. அவை கடல் தண்ணீரில் அடித்துச் சென்று விட்டது. ராமபிரானுக்கு வருத்தம் இந்த வானரங்கள் போடும் கற்கள் மட்டும் மற்றொரு கல்லின் மீது அமர்ந்து விட்டதே இதற்கு என்ன காரணமாக இருக்கும் என வருத்தப்பட்டார்.
அனுமனும் ராமர் அருகில் வந்தார் அவர் அனைத்தையும் கவனித்துக் கொண்டுதான் இருந்தார்
ஆஞ்சநேயா நான் செய்ததை நீ பார்த்து விட்டாயா? எனக்கு ஒரு கல்லைபோடக்கூடத் தெரியவில்லை என்னை நினைத்து எனக்கே வெட்கமாக இருக்கிறது என்றார்.
அதற்கு அனுமன் ப்ரபோ! எல்லா வானரங்களும் உங்கள் தாரக மந்திரமான ராம் ராம் என்ற உங்கள் நாமத்தைச் சொல்லிக் கொண்டே கற்களைத் தூக்கிப் போட்டன. அவை சரியாக அமர்ந்தது நீர் ராமனாகவே இருந்தாலும் ராம நாமம் சொல்லி போட்டிருந்தால் அது சரியாக கற்களில் போய் அமர்ந்திருக்கும் என்றாராம்.
ராமநாமம் அவ்வளவு சக்தி வாய்ந்தது
ராமநாமம் மிகவும் அற்புதமானது. ராம நாமமே கற்கண்டு அதை
அறியாதார் கல்குண்டு என்பர் சான்றோர். காசியில் இறப்பவர்களுக்கு முக்தியை கொடுப்பது ஸ்ரீ ராம நாமத்தாலே!


அத்வைதமத ஸ்தாபகர் ஆதிசங்கரர். அவர் ஸ்ரீவிஷ்ணுஸஹஸ்ரநாமத்திற்க்கு (உரை)பாஷ்யமிட்டார். (கோவிந்தனையே பூஜிக்கவேண்டுமென்று 'பஜகோவிந்தம்' என்ற நூலைப் பாடினார்) அவராலேயே தாரக மந்திரமாகிய இராமநாமத்தின் ஒப்பற்ற தன்மையும் விளக்கப்பட்டிருக்கிறது. அவர் அவ்வாறு இராமநாமத்தின் பெருமையைக் கூறுமிடத்து, காசியில் பரமசிவன் இராம நாமத்தை எப்போதும் ஜபித்துக் கொண்டு வசிப்பதையும், காசியில் மரணமடைந்த ஜீவனுடைய காதில் சிவன் தாரகமந்திரமாகிய இராம நாமத்தைத் தானே 'ராம ராம ராம' என்று உபதேசிப்பதையும் விளக்கி "ஜனன மரணச் சிறையிலிருந்து விடுவித்துக் காப்பதும், உயிர்பிரியும்போது பரமசிவனால் உபதேசிக்கப்பெறுவதுமான. இராம நாமத்தை நான் பஜிக்கிறேன். அதுவும் ஒருமுறையல்ல. நான்கு தடவை பஜிக்கிறேன்" என்று அறுதியிட்டுக் கூறும்
"யத் வர்ணயத் கர்ணமூலேSந்தகாலே
ஸிவோ ராம ராமேதி ராமேதி காஸ்யாம்|
ததேகம் பரம் தாரகம் ப்ரஹ்மரூபம்
பஜேஹம் பஜேஹம் பஜேஹம் பஜேஹம்||"
என்ற சுலோகத்தின் பொருளுணர்க.
முன்னொரு காலத்தில் சிவன் பிரமனின் சிரசை அறுக்க, அச்சிரம்(தலை) சிவனின் கையைவிட்டு அகலாதிருக்க; பிரமஹத்தியால் வந்த வினையைத் தீர்க்கப் பிக்ஷாடனராய், பூமி எங்கும் சுற்றித் திரிந்து திருமகள் நாதன் பிந்து மாதவனாய் உகந்துறைகின்ற காசி நகரை அணுகியதும், அவ்வரன் கையிலிருந்த கபாலம் கழன்று விழுந்தது. இதைக்கண்டு சிவன், திருமாலை வணங்கி " இறைவா! நீ உகந்துறைகின்ற(வாரணாசி) இத்திருப்பதியை அடைந்ததும் என்னைப்பற்றிய பாதகம் விலகியது. நீ வாழும் பதிக்கே இவ்வளவு மகிமை என்றால் உன் புகழை யாரால் ஓதமுடியும்?"  என்று துதித்தார்.
அப்பொழுது காசிநகர் மாதவனும் பரமசிவனைப்பார்த்து; "சிவனே! இன்றுடன் உமது இன்னல் அகன்றது, இனி நீர் உமது உறைவிடமான கைலாசமலைக்குச் செல்வீர்" என்று  அருளிச் செய்தார். சிவனும் விடைபெற்று தன் ரிஷபத்தின் மீதேறிக் காசிமாநகரை விட்டகன்றார். அந்நகரை நீங்கியதும், முன்பு போல் பிரமனின் மண்டையோடு சிவன் கையைப் பற்றிக்கொண்டது. மறுபடியும் காசிப்பதிக்கி வந்து திருமாலை அடி பணிந்து, நடந்த வரலாற்றைக் கூறி; "மாதவா! நீ வசிக்கும் இப்புண்ணிய நகரத்தின் மகிமையால் என் மாபாதகம் நீங்கப் பெற்றேன். இனியும் இப்பதியை விட்டகல்வேனல்லேன்.
எப்பொழுதும் இனி இப்பதியிலேயே இருக்க வரந்தரவேண்டும்" என்று வேண்டினார்.


சிவனுக்கிரங்கிய அச்சுதன் காசியம்பதியை சிவனுக்கு தானமாக அளித்து, தான் பிரயாகையை அடைந்தான். அன்று முதல் சிவன் காசியில் இருந்துகொண்டு வேண்டுவோர்க்கு வேண்டும் வரங்கொடுத்து தரலாயினான். இதை உணர்ந்த அந்தணரும், யோகியரும், ஞானியரும் அப்பதிக்கு வந்து முக்தியை விரும்பத் தவம் கிடந்தனர்.

இவர்களது நிலையைக் கண்ட சிவன், 'யாம் இவர்கள் விரும்பும் முக்தியை எவ்வாறு கொடுக்கவல்லோம்? என்று பிரமனைத் தியானித்தார். அவ்வமயம் நான்முகனும் அங்கு வந்து 'உம் சிந்தையில் உள்ள விஷயம் யாது?' என்றார். சிவ பிரானும் பிரமனை நோக்கி, "இங்குள்ள ஞானியர்கள் என்னை முக்தி தரும் தெய்வமாக மதித்துத் தவம் செய்கின்றனர். இவர்கள் கருதுவதை நான் உதவுவதற்க்கு உபாயம் உரைத்தருள்வீர்" என்று வேண்டினார்.

பிரமனும், தாரக மஹாமந்திரமாகிய ஸ்ரீராம மந்திரத்தைச் சிவனுக்கு உபதேசித்து, "இனி கங்கைக் கரையில் சரீரத்தை விடுவோர் காதில் இம்மந்திரத்தை உபதேசித்திடுவீர். இதன் பயனாக அவர்களும் முக்தியைப் பெறுவார்கள்; உமது எண்ணமும் ஈடேறும்" என்று கூறி மறைந்தார். அன்று முதல் இன்று வரை சிவன் காசியில் மரணடைபவர் காதில் ராமநாமத்தை ஓதி அவர்களுக்கு முக்திபேற்றைக் கொடுத்து மகிழ்கின்றனன். இவ்வரலாறு நாரதீயம், அகத்திய இராமசங்கிதை முதலியவற்றில் சொல்லப் பட்டிருப்பதாக இருசமய விளக்கம் விவரிக்கும். இன்றும்
காசி  விஸ்வநாதர்  கோவிலில்  மாலை வழிபாட்டின்  போது ( சப்தரிஷி   பூஜையின்  போது )
ஒவ்வொரு  நாளும், வில்வ  தளங்களில் சந்தனத்தால்  ராம நாமம்  எழுதி,   அவற்றை விஸ்வநாதருக்கு   சமர்ப்பிக்கிறார்கள்.
சிவன் பார்வதியின் கேள்விக்குப் பதில் சொல்லு மிடத்து. "இராமநாமத்தைச் சொன்னால் ஸ்ரீவிஷ்ணுஸஹஸ்ர நாமத்தைச் சொன்ன பலன் உண்டு" என்றும், தானும் அந்த இராமநாம கீத ஒலியிலே ரமித்துக்கொண்டிருப்பதாகவும் கூறும்
"ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மநோரமே|
ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராமநாம வராநநே||
என்னும் விஷ்ணுஸஹஸ்ரநாம சுலோகம் காண்க. 




கையில் துளசிமாலை, நெஞ்சில் இராமதத்துவம், சிரசில் கேசவனுடைய ஸ்ரீபாததீர்த்தம், நாவின் நுனியில் தாரக நாம மாகிய இராம மந்திரம், இவைகளைத் தரித்து நிற்க்கும் சிவனை மஹா பாகவதனாக நினைக்கிறேன்" என்ற கருத்துக்கொண்ட,

"ஹஸ்தேSக்ஷமாலம் ஹ்ருதி ராமதத்வம்
ஸ்வமஸ்தகே கேஸவபாத தீர்த்தம்
ஜிஹ்வாக்ரபாகே வரராமமந்த்ரம்
ஸிவம் மஹாபாகவதம் ஸ்மராமி||"

என்ற ச்லோகம் இங்கு கருதத் தக்கது.

இத்தகைய சிறப்பு மிக்க ராம நாமத்தை ராமகதையோடு சேர்த்து ஜபிக்க "ஸ்ரீநாம ராமாயணம்" எனும் ஸ்தோத்திரம் மத்வஸ்ரீ பண்டிட் லட்சுமணாச்சாரியர் என்ற மகானால்  இயற்றப்பட்டது. இத்தோத்திரம் ஜபிப்பதன் மூலம் இராமாயண பாராயணமும், நாம ஜபமும் ஒருங்கே செய்த திருப்தியுண்டாகிறது. இதனால் சரீர வ்யாதியையும்,மனோ வ்யாதியையும்  தீர்த்துக்கொள்ளலாம் என்பது ஐதீகம்.

ஸ்ரீ நாமராமாயணம்

ஓம் ஸ்ரீ ஸீதாலக்ஷ்மண பரதஸத்ருக்ந ஹனுமத் ஸமேத ஸ்ரீ ராமச்சந்த்ர பரப்ரஹ்மனே நம:

பாலகாண்டம்
1 .ஸுத்த ப்ரஹ்ம பராத்பர ராம்
2 .காலாத் மக பரமேஸ்வர ராம்
3 .ஸேஷ தல்ப ஸுக நித்ரித ராம்
4. ப்ரஹ்மாத் யமரப் ரார்த்தித ராம்
5. சண்டகிரண குலமண்டந ராம்
6. ஸ்ரீமத் தஸரத நந்தந ராம்
7. கௌஸல்யா ஸுகவர்த்தந ராம்
8. விஸ்வாமித்ர ப்ரியதந ராம்
9.கோர தாடகா காதக ராம்
10. மாரீசாதிநி பாதக ராம்
11. கௌஸிகமக ஸம்ரக்ஷக ராம்
12. ஸ்ரீ மதஹல்யோத்தாரக ராம்
13. கௌதம முனி ஸம் பூஜித ராம்
14. ஸுரமுனி வரகண ஸம்ஸ்துத ராம்
15. நாவி கதா விதம் ம்ருது பத ராம்
16. மிதிலா புர ஜன மோஹக ராம்
17. விதேஹ மாநஸ ரஞ்ஜக ராம்
18.த்ர்யம்பக கார்முக பஞ்ஜக ராம்
19.ஸீதார்ப்பித வரமாலிக ராம்
20.க்ருதவை வாஹிக கௌதுக ராம்
21. பார்க்கவ தர்ப்ப விநாஸக ராம்
22. ஸ்ரீ மதயோத்யா பாலக ராம்

ராம ராம ஜெய ராஜா ராம்
ராம ராம ஜெய ஸீதா ராம்

அயோத்யா காண்டம்
23. அகணித குணகண பூஷித ராம்
24. அவநீத நயா காமித ராம்
25. ராகா சந்த்ர ஸமாநந ராம்
26. பித்ரு வாக்யா ஸ்ரித காநந ராம்
27. ப்ரிய குஹ விநி வேதிதபத ராம்
28. தத்க்ஷாலித நிஜ ம்ருது பத ராம்
29. பரத்வாஜ முகா நந்தக ராம்
30. சித்ரா கூடாத்ரி நிகேதந ராம்
31. தஸரத ஸந்தத சிந்தித ராம்
32. கைகேயீ தந யார்த்தித ராம்
33. விரசித நிஜ பித்ரு கர்மக ராம்
34. பரதார்ப்பித நிஜ பாதுக ராம்

ராம ராம ஜெய ராஜா ராம்
ராம ராம ஜெய ஸீதா ராம்

ஆரண்ய காண்டம்
35. தண்டகா வந ஜந பாவந ராம்
36. துஷ்ட விராத விநாஸத ராம்
37. ஸரபங்க ஸுதீக்ஷ்ணார்ச்சித ராம்
38. அகஸ்த்யா நுக்ரஹ வர்த்தித ராம்
39. க்ருத்ராதி பஸம் ஸேவித ராம்
40. பஞ்சவடி தட ஸுஸ்தித ராம்
41. ஸுர்ப்பண கார்த்தி விதாயக ராம்
42. கரதூ ஷணமுக ஸூதக ராம்
43. ஸீதா ப்ரிய ஹரிணாநுக ராம்
44. மாரீசார்த்திக் ருதாஸுக ராம்
45. விநஷ்ட ஸீதாந் வேஷக ராம்
46. க்ருத்ராதி பகதி தாயக ராம்
47. ஸபரி தத்த பலாஸந ராம்
48. கபந்த பாஹூச் சேதந ராம்

ராம ராம ஜெய ராஜா ராம்
ராம ராம ஜெய ஸீதா ராம்

கிஷ்கிந்தா காண்டம்
49.ஹனுமத் ஸேவித நிஜபத ராம்
50.நத ஸுக்ரீவா பீஷ்டத ராம்
51.கர்வித வாலி ஸம்ஹாரக ராம்
52.வானர தூத ப்ரேஷக ராம்
53.ஹிதகர லக்ஷ்மண ஸம்யூத ராம்

ராம ராம ஜெய ராஜா ராம்
ராம ராம ஜெய ஸீதா ராம்

ஸுந்தர காண்டம்
54. கபிவர ஸந்தத ஸம்ஸ்ம்ருத ராம்
55. தத்கதி விக்னத் வம்ஸக ராம்
56. ஸீதா ப்ராணா தாரக ராம்
57. துஷ்டத ஸாதந தூஷித ராம்
58. ஸிஷ்ட ஹநூமத் பூஷித ராம்
59. ஸீதா வேதித காகாவந ராம்
60. க்ரூத சூடாமணி தர்ஸந ராம்
61. கபிவர வஸநா ஸ்வாஸித ராம்

ராம ராம ஜெய ராஜா ராம்
ராம ராம ஜெய ஸீதா ராம்

யுத்த காண்டம்
62. ராவண நிதநப் ரஸ்தித ராம்
63. வாநர சைன்ய ஸமாவ்ரூத ராம்
64. ஸோஷித ஸரீதி ஸார்த்தித ராம்
65. விபீஷணா பயதாயக ராம்
66. பர்வத ஸேது நிபந்தக ராம்
67. கும்பகர்ண ஸிரஸ் சேதக ராம்
68. ராக்ஷஸ ஸங்க விமர்த்தக ராம்
69. அஹி மஹி ராவண சாரண ராம்
70. ஸம்ஹ்ரூத தஸமுக ராவண ராம்
71. விதிபவ முகஸுர ஸம்ஸ்துத ராம்
72. கஸ்தித தஸரத வீக்ஷித ராம்
73. ஸீதா தர்ஸந மோதித ராம்
74. அபிஷிக்த விபீஷண நத ராம்
75. புஷ்பக யாநா ரோஹண ராம்
76. பரத்வா ஜாபி நிஷேவண ராம்
77. பரத ப்ராண ப்ரியகர ராம்
78. ஸாகே தபுரீ பூஷண ராம்
79. ஸகல ஸ்வீய ஸமாநத ராம்
80. ரத்நல ஸத்பீடா ஸ்தித ராம்
81. பட்டாபிஷேகா லங்க்ருத ராம்
82. பார்த்திவ குல ஸம்மாநித ராம்
83. விபீஷணார்ப் பித ரங்கக ராம்
84. கீஸகுலா நுக்ரஹ கர ராம்
85. ஸகல ஜீவ ஸம்ரக்ஷக ராம்
86. ஸமஸ்த லோகா தாரக ராம்

ராம ராம ஜெய ராஜா ராம்
ராம ராம ஜெய ஸீதா ராம்

உத்தர காண்டம்
87. ஆகத முநிகண ஸம்ஸ்துத ராம்
88. விஸ்ரூத தஸகண்டோத் பவ ராம்
89. ஸீதாலிங்கந நிர்வ்ரூத ராம்
90. நீதி ஸுரக்ஷித ஜநபத ராம்
91. விபிநத் யாஜித ஜநகஜ ராம்
92. காரித லவணா ஸுரவத ராம்
93. ஸ்வர்க்க தஸம்புக ஸம்ஸ்துத ராம்
94. ஸ்வதநய குஸ லவ நந்தித ராம்
95. அஸ்வமேதக்ரது தீக்ஷித ராம்
96. காலா வேதித ஸுரபதி ராம்
97. அயோத்யக ஜந முக்தித ராம்
98. விதிமுக விபுதா நந்தக ராம்
99. தேஜோமய நிஜ ரூபக ராம்
100. ஸம்ஸ்ரூதி பந்த விமோசக ராம்
101. தர்ம ஸ்தாபந தத்பர ராம்
102. பக்தி பராயண முக்தித ராம்
103. ஸர்வ சராசர பாலக ராம்
104. ஸர்வ பவாமய வாரக ராம்
105. வைகுண்டாலய ஸம்ஸ்தித ராம்
106. நித்யாநந்த பத ஸ்தித ராம்
107. ராம ராம ஜெய ராஜா ராம்
108. ராம ராம ஜெய ஸீதா ராம்

// இதி ஸ்ரீ நாம ராமாயணம் ஸம்பூர்ணம் //


அன்புடன்

 ஸ்ரீ பா ல சு பி க் ஷ ம்
E.P.I. இராம சுப்பிரமணியன்

Audio download link:- 


மிதக்கும் கல்
Youtube video



No comments:

Post a Comment