1936ம் ஆண்டு திருக்கோட்டியூரில் தென்கலை வைஷ்ணவ குடும்பத்தில் பிறந்த நம் அரங்கராஜன் ஸ்வாமி மதுரைக் கல்லூரியில் தமிழாசிரியராக பணியாற்றியுள்ளார். 'திருவாய்மொழிப் பேருரையாளர் நம்பிள்ளை உரைத்திறன்’ என்கிற தலைப்பில் 1981ம் ஆண்டு ஆய்வு மேற்க்கொண்டு மதுரை காமராசர் பல்கலைக்கழகம் வழங்கிய முனைவர் (டாக்டர் - Ph.D) பட்டம் பெற்றார்.
தொட்டாச்சாரியர் திருமாளிகை ஸ்ரீ.உ.வே. கோயில் கந்தாடை சண்டமாருதம் பெரியப்பங்கார் ஸ்வாமியிடம் திருவடி சம்பந்தம் பெற்ற நம் ஸ்வாமிக்கு காஞ்சிபுரம் மஹாவித்வான் பிரதிவாதி பயங்கரம் ஸ்ரீ.உ.வே. அண்ணங்கராச்சாரியார் ஸ்வாமிகளால் 'கலையிலங்கு மொழியாளர்' என்று பாராட்டுரையும் கிடைத்தது.
கலையிலங்கு மொழியாளர், மதுரைப்பேராசிரியர்,Dr.இரா.அரங்கராஜன் M.A., Ph.D., அவர்கள் ஆற்றிய கைங்கர்யங்கள் சிலவற்றைக் காண்போம்.
✒ ஸ்ரீவைஷ்ணவ சம்ப்ரதாய க்ரந்தங்களைப் பெரியோர்பால் முறையாகப் பயின்று அவற்றை பல திருமால் திருத்தலங்களில் அனைவரும் உளங்கொள்ள இன்றும் சொற்பொழிவு ஆற்றிவரும் நம் அரங்கராஜன் ஸ்வாமி வைணவப்பெரியார்களின் மணிவிழா மலர்களி ல் அரிய ஆய்வுக் கட்டுரைகள் எழுதியும், வைணவ மாநாடுகளில் திருமால் திருநெறியை பரப்பியும் வந்த சிறப்பைப் பெற்றவர்.
✒ சுமார் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக மதுரை கூடலழகர் திருக்கோயிலில் திருப்பாவை வியாக்யானம் செய்த பெருமைக்குரியவர்.
✒ கீதாசாரியன், திருக்கோயில், கலைமகள் ஆகிய மாத இதழ்களில் வைணவம் சார்ந்த சிறுகதை மற்றும் கட்டுரைகள் எழுதியுள்ளார்.
✒ ஸ்ரீமணவாள மாமுனிகள் வைபவம், ஸ்ரீவானமாமலை ஜீயர் வைபவம்,திருவாய்மொழிப்பிள்ளை வைபவம், ஸ்ரீவைஷ்ணவ தர்மம், வைகுந்தம் புகும் மண்ணவர் யார்?, நூற்றியெட்டு திருப்பதி மாலைத் தொகுப்பு பெரியாழ்வார் திருமொழி உரை, தமிழக கோயிற்கலை ( தமிழக திருக்கோயில்களின் வழிபாட்டு வரலாறு~ஆண்டு-2000),ஸ்ரீவைஷ்ணவ தாஸர்கள் என்ற சீர்மிகு ராமாநுச தாஸர்கள் முதலிய நூல்களை எழுதி வெளியிட்டார்.
✒ தனது சதாபிஷேக (01.06.2016) வெளியீடான ஸ்ரீவைஷ்ணவ லட்சண நிர்ணயம், பட்டர்பிரான் ஜீயர் அருளிச்செய்த அந்திமோபாய நிஷ்டை,திருநட்சத்திரமாலை,நித்யானுசந்தானம்,திருவாராதனக்ரமம் ஆகிய நூல்களுக்கு தொகுப்பாசிரியர் நம் ஸ்வாமியே ஆவார்.
✒ மதுரை வட்டார வைணவத் தலங்களுக்கு குடமுழுக்கு நன்னீராட்டு விழா மலர்கள்,மற்றும் ஸ்தலபுராணங்கள் ஆகிய பலவற்றிற்கும் ஆசிரியராக பணியாற்றியுள்ளார்.
திருமாலிருஞ்சோலை அழகர் பால் தீராக்காதல் கொண்ட நம் அரங்கராஜன் ஸ்வாமிக்கு மதுரை வடக்கு மாசி வீதி இராமாயணச்சாவடி இடையரான 'திருமால் சோலை மணி' (இராமக்காரர்) எனும் வைணவ மணி அன்பராக நண்பராக வாய்த்தார். அதற்கு முக்கிய காரணம் 'கலையிலங்கு மொழியாளர்' எனும் பட்டமளித்த காஞ்சீபுரம் வித்வான் ஸ்வாமிகளின் முகச்சாயல் அவர் கொண்டிருந்ததாலேயே ஆகும். மேலும் மா.செல்லப்பெருமாள் கோனார் சார்ந்த வடக்கு மாசி வீதிக்காரர் வேறு.
அவர் யார் மா.செல்லப்பெருமாள் கோனார்? அதை அடுத்த பதிவு - Post ல பார்ப்போம்.
அன்புடன்
ஸ்ரீ பா ல சு பி க் ஷ ம்
E.P.I. இராம சுப்பிரமணியன்
Excellent. thanks Swamin for posting about arangarajan swami. Can I get his upanyasam audio ? Can you please let me know where I can get ? I am based out of Madurai
ReplyDelete