Saturday, August 25, 2018

காஞ்சி ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயில் தரிசனம்


காஞ்சி வரதராஜப்பெருமாள் கோவில்...!!! திருக்கச்சி அல்லது காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் என்பது பெருமாள் கோயில் என்று வைணவர்களால் போற்றப்படுகிறது. வைணவ பாரம்பரியத்தில் திருவரங்கம் மற்றும் திருவேங்கடம் ஆகிய தலங்களுக்கு அடுத்ததாக முக்கியத்துவம் வாய்ந்த தலம். இது சென்னைக்கு அடுத்த காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள முப்பதோராவது திவ்ய தேசமாகும். வரலாறும் சிற்பக்கலையும் இக்கோயில் எவரால் முதலில் நிறுவப்பட்டது என்பது தெரியவில்லை. எனினும் கி பி 1053 இல் சோழர்களால் வேழமலையில் குகைவரைக் கோயில் கிழக்கு மேற்கே விரிவாக்கப்பெற்றது என்று கல்வெட்டுகளின் மூலம் அறியபடுகிறது. முதலாம் குலோத்துங்க சோழனும், விக்கிரம சோழனும் கோயிலை விரிவுபடுத்தினர். பதினான்காம் நூற்றாண்டில் தாயார் சன்னதியும், அபிஷேக மண்டபமும் அமைக்கப்பெற்றன. சோழர்களின் வீழ்ச்சிக்குபின், விஜயநகர அரசர்கள் கிழக்கு கோபுரம், ஊஞ்சல் மண்டபம் மற்றும் கல்யாண மண்டபங்களை நிறுவினர். கல்யாண மண்டபம் எட்டு வரிசைகளில், வரிசைக்கு பன்னிரண்டு தூண்களாக 96 சிற்பகலை மிக்க ஒரே கல்லாளான தூண்கள் நிறைந்த மண்டபம் ஆகும். தூண்களில் யாளி, போர்குதிரை, குதிரை மீது வீரர்கள் மற்றும் பல்வகை சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இதற்குள் உள்ள சிறிய நன்கு தூண் கொண்ட மண்டபத்தையும் சேர்த்து நூறு கால் மண்டபம் என அழைக்கப்படுகிறது. இதன் நான்கு மூலைகளில் தொங்கும் கற்சங்கிலிகள் சிற்பக்கலையின் விந்தையாகும். கிழக்கு கோபுரம் ஒன்பது நிலைகளுடன் 180 அடி உயரமுடையது. தற்போது இக்கோபுரம் சிதிலமடைந்துள்ளது. கோயில் அமைப்பும் உட்சன்னதிகளும் மூலவராகிய தேவராஜப் பெருமாள், வேழ மலை (அத்திகிரி) மீது நின்ற திருக்கோலத்தில் மேற்கே திருமுகமண்டலமுடன் நாற்கரத்துடன் அருள்பாலிக்கிறார். மூலவர் மலை மீது அமைந்துள்ளார் என்பதற்கு சான்றாக கர்பகிரகத்தின் நேர் கீழே குன்று குடைவரை கோயிலில் யோக நரசிங்க பெருமாள் வீற்றுக்கிறார். பெருமாளை காண்பதற்கு இருப்பதிநான்கு படிகளை ஏறிச்செல்லும் போது காணப்படும் தங்க பல்லி மற்றும் வெள்ளி பல்லி, இக்கோவிலில் பிரசிதம். மூலவரை நோக்கிய படி தென்மேற்கே பெருந்தேவி தாயாருக்கு தனி சன்னதியும், திருக்குளத்தின் எதிரே சக்கரதாழ்வர் சன்னிதி உள்ளது. கோயில் வெளி பிரகாரத்தில் கண்ணன், ராமர், வராஹா பெருமாள் சன்னதிகளும், ஆண்டாள், ஆழ்வார்கள், களியமானிக்க பெருமாள், ஆச்சார்யர்கள் சன்னதிகளும் மற்றும் நம்மாழ்வார் சன்னதியும் உள்ளன. இராஜகோபுரம் 96 அடி உயரமுள்ளது. அத்தி வரதர் எனப்படும் மரத்தல் செய்யப்பட்ட பெருமாள், திருக்குளத்தில் பள்ளி கொண்டிருக்கிறார். முழுதும் அத்திமரத்தால் ஆன பள்ளிகொண்ட பெருமாள் நீண்ட நெடிய உருவம்.40 ஆண்டுகளுக்கு ஒருமுறை, குளத்து நீரை முழுவதும் வெளியேற்றி ஸ்ரீ அத்திவரதரின் திருவுருவச் சிலையை வெளியெடுத்து, கோயிலில் பள்ளிகொள்ள வைத்து ஒருமாத காலத்திற்கு உற்சவங்கள் பிரமாதமாக நடக்கும். அத்திவரதரை தம் வாழ்நாளில் தரிசிப்பது மிகப் பெரும் பேறு ஆகையால், எங்கிருந்தெல்லாமோ வந்து மக்கள் பெருமாளைத் தரிசிப்பர். திருக்குளத்தின் கிழக்குத்திசையில் சக்கரத்தாழ்வார் என பேசப்படுகின்ற சுதர்சன ஆழ்வார் சந்நிதி அமைந்துள்ளது.தமிழகத்தில் எங்கும் காணமுடியாத மிகப்பெரிய அளவில் சுதர்சன ஆழ்வார் திருமேனி காட்சி தருகின்றது. இவர் 16 கைகளுடன் சங்கு சக்கரங்கள் தாங்கி காட்சியளிக்கின்றார். பாடல்கள் மங்களாசாசனம், திருமங்கையாழ்வார் என்னெஞ்சம் மேயான் என் சென்னியான், தானவனை- வன்னெஞ்சம் கீண்ட மணிவண்ணன், முன்னம்சேய்- ஊழியான் ஊழி பெயர்த்தான், உலகேத்தும்- ஆழியான் அத்தியூரான். அத்தியூரான் புள்ளை ஊர்வான், அணிமணியின்- துத்திசேர் நாகத்தின் மேல்துயில்வான், - மூத்தீ- மறையாவான் மாகடல் நஞ்சுண்டான் தனக்கும் இறையாவான் எங்கள் பிரான். திருவிழாக்கள் வைகாசி மாதத்தில் உற்சவத் திருவிழா ஒவ்வொரு வருடமும் சிறப்பாக நடைபெறும். இவ் உற்சவத் திருவிழாவில் கருடசேவையும், தேரும் மிகப்பிரபலம். போக்குவரத்து காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் காஞ்சிபுரம் - செங்கற்பட்டு சாலையில் அமைந்துள்ள இத்திருத்தலத்திற்கு நகர பேருந்துகளும் ஆட்டோக்களும் இயக்கப்படுகின்றன. காஞ்சிபுரத்திற்கு சென்னையிலிருந்து எண்ணற்ற பேருந்துகளும் ரயில்களும் உள்ளன.
ஸ்ரீகாஞ்சி வரதராஜர் கோயில் கொண்டுள்ள திருத்தலம், சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக  அமைந்துள்ளது. கிழக்கு கோபுரம் 9 நிலைகளுடனும் மேற்கு கோபுரம் 7 நிலைகளுடனும் திகழ்கின்றன.
காஞ்சிபுரத்தில், ஏராளமான வைணவ தலங்கள் உள்ளன. ஆனால் அதில் மிக முக்கியமான ஒரு கோயில் காஞ்சி ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயில்.  108 திவ்ய தேசங்களில் 44-வது திவ்ய தேசம். ஸ்ரீஹயக்ரீவர், அகத்தியருக்கு 'ஸ்ரீவித்யை'யை உபதேசித்த தலம்... இப்படி பல சிறப்புகள் கொண்ட இத்திருத்தலம் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ளது . வில்லிபாரதத்தின் ‘தீர்த்த யாத்திரை’ சருக்கத்தில் அர்ஜுனன் காஞ்சிபுரம் வந்து ஸ்ரீவரதராஜர், அஷ்டதச புஜ பெருமாள் ஆகியோரை தரிசித்ததுடன், ஏழு நதிகள் மற்றும் தீர்த்தங்களில் நீராடியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அர்த்த சாஸ்திரம் எழுதிய சாணக்கியர், திருக்குறளுக்கு உரை எழுதிய பரிமேலழகர், சக்ரவர்த்தி ஹர்ஷவர்த்தனர் நிறுவிய நாளந்தா பல்கலைக்கழகத்தின் முதல் தலைவரான தர்மபாலர் முதலான அறிஞர்கள், கல்வியும் ஞானமும் பெற்ற தலம் இது.

கி.மு. 2-ம் நூற்றாண்டில் பண்டைய சோழர்களது தலைநகரமாக இருந்த காஞ்சி கி.பி. 3 முதல் 9-ம் நூற்றாண்டு வரை பல்லவர்களது தலைநகரமாகவும், 10 முதல் 14ஆம் நூற்றாண்டு வரை பிற்காலச் சோழர்களின் தலைநகராகவும் திகழ்ந்ததாம். பிறகு, 17-ம் நூற்றாண்டில் விஜயநகர மன்னர்களால் சிறப்புப் பெற்றது காஞ்சி மாநகரம்!

பிரளய காலத்திலும் அழியாத தலம் காஞ்சி ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயில்
காஞ்சியை விஷ்ணு காஞ்சி, சிவ காஞ்சி, பெரிய காஞ்சி என்று மூன்று பிரிவாகக் கொள்வர். இவற்றில் விஷ்ணு காஞ்சியில் அமைந்துள்ள ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயில் தல வரலாறை, பிரும்மாண்ட புராணம் ஹஸ்திகிரி மகாத்மியம் (18 அத்தியாயங்கள்) மூலம் அறியலாம். இதையெல்லாம் பிருகு மகரிஷிக்கு நாரத முனிவர் விவரித்து அருளினார்

  *மூலவர்:-
 ஸ்ரீவரதராஜர், பேரருளாளன், தேவாதிராஜன், தேவப்பெருமாள்,
அத்தியூரான் மூலவர் ஸ்ரீதேவராஜர், அத்திவரதன், கஜேந்திர வரதர் என பல பெயர்கள் உண்டு. பல திருநாமங்கள். மேற்கு நோக்கி நின்ற திருக்கோலம்.

*தாயார்:-
பெருந்தேவித் தாயார் மஹாதேவி தனிக்கோவில்

*தீர்த்தம்
வேகவதி நதி, அனந்த ஸரஸ், சேஷ தீர்த்தம், (நூற்றுக்கால் மண்டபத்தின் அருகே 'அனந்த சரஸ்' எனும் தீர்த்தம் உள்ளது.  இதில்  சனிக்கிழமைகளில் நீராடுவோருக்கு காவிரியில் நீராடிய பலன் கிட்டும். ஆதிசேஷன் இதில் நீராடி பூமியைத் தாங்கும் வல்லமை பெற்றாராம். இதை 'சேஷ தீர்த்தம்' என்றும் கூறுவர்.)
 வராஹ தீர்த்தம், பிரம்ம
தீர்த்தம்,

*விமானம்
புண்யகோடி விமானம்

*(பிரத்யட்சம்)காட்சி கண்டவர்கள்
 பிரம்மா, பிருகு, நாரதர் ஆகியோர். கஜேந்திரன் (இந்திரன்) சரஸ்வதி
மற்றும் பலர்.
திருமங்கையாழ்வாரால் 4 பாசுரங்களாலும், பூதத்தாழ்வாரால் இரண்டு
பாசுரங்களாலும், பேயாழ்வாரால் ஒரு பாசுரத்தாலும் மங்களாசாசனம்
செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீஆளவந்தார், இராமானுஜர், ஸ்வாமி தேசிகன், மணவாள
மாமுனிகள், திருக்கச்சி நம்பிகள், பெரிய நம்பி ஆகியோருக்கும் இந்த
வரதராஜப் பெருமாளுக்கும் உள்ள சம்பந்தம் பற்றித் தனி நூலொன்றே
எழுதிவிடலாம்.


*சிறப்புக்கள்
1) திருவேங்கடம் போன்றும், திருவரங்கம் போன்றும் எண்ணற்ற
பெருஞ்சிறப்புக்கள் கொண்ட திவ்ய தேசமாகுமிது. காஞ்சியில் உள்ள
வைணவத் தலங்கட்குத் தீபம் போலவும், தொண்டை நாட்டுத் தலங்கட்குத்
திலகம் போன்றும் திகழ்வதாகுமிது. விஷ்ணு காஞ்சியென்றும்,
அத்திகிரியென்றும், திருக்கச்சி என்றும், ஸ்தய விரத சேஷத்ரமென்றும்
பெயர்கொண்ட இத்தலம் வைணவ சம்பிரதாயத்தில் வடகலைக்கு தமிழகத்தில்
ஒரு தலைமை இடமாகத் திகழ்கிறது. மாமேதைகளும் வடகலை ஞானியரும்,
வைணவ வல்லுனர்களும், பாகவதோத்தமர்களும், பக்தர்களும் எந்நேரமும்
சுற்றிச் சூழ வந்து கொண்டிருக்கும் திவ்யமான திவ்யதேசமாகுமிது.

     2) இங்குள்ள குளத்தில் மூழ்கியிருக்கும் அத்திவரதர் என்றழைக்கப்படும்
அத்திமரத்தாலான சிலையை 40 வருடங்கட்கு ஒரு முறை வெளியே எடுத்து
பூஜை செய்து 10 தினங்கட்குப் பொதுமக்கள் தரிசனத்திற்கு வைக்கப்படுகிறது. காஞ்சிபுரத்தில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ள பாலாற்றில் இறங்கும் 'நடபாவி உற்சவம்' சித்ரா பௌர்ணமி அன்று நடைபெறுகிறது
     3) சித்ரா பௌர்ணமியன்று இப்போதும் ஒவ்வொர் ஆண்டும் இரவு 12
மணிக்கு மேல் பிரம்மனே இங்கு நேரில் வந்து எம்பெருமானை வழிபடுவதாக
ஐதீஹம். இந்த தினத்தில் எம்பெருமானுக்குப் பிரசாதம் செய்து வைத்துவிட்டு
பட்டர்கள் வெளியே வந்து விடுவார்கள். ஒரு நாழிகை (24 நிமிஷம்) கழித்து
எடுத்துப் பார்த்தால் அதில் தூய நறுமணம் கமழும் இக்காட்சி ஆண்டுதோறும்
இங்கு நடைபெறும் வைபவமாகும்.
சித்திரை மாதம் பௌர்ணமி கழிந்த 15 தினங்கட்கு சூரியன்
மறையும்போது சூரியனிடமிருந்து வரக்கூடிய கதிர்கள் மூலவரின் திருமுகத்தில்
விழுமாறு அமைக்கப்பட்டுள்ளது. 15 நாட்களும் கண்டு களிக்கக் கூடிய
இவ்வரிய காட்சி மற்றெந்த திவ்ய தேசத்திலும் இல்லாததாகும். ஆடி மாதத்தில் வளர்பிறையில் தசமியன்றும் தேய்பிறையில்
ஏகாதசியன்றும் திருவனந்தாழ்வான் எனப்படும் ஆதிசேடனுக்கு இங்கு
சிறப்பான வழிபாடு நடக்கிறது. இந்த இரண்டு தினங்களிலும் ஆதிசேடனே
இங்கு வந்து வழிபடுவதாக ஐதீஹம்.

    திருமங்கையாழ்வாரால் 4 பாசுரங்களாலும், பூதத்தாழ்வாரால் இரண்டு
பாசுரங்களாலும், பேயாழ்வாரால் ஒரு பாசுரத்தாலும் மங்களாசாசனம்
செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீஆளவந்தார், இராமானுஜர், ஸ்வாமி தேசிகன், மணவாள
மாமுனிகள், திருக்கச்சி நம்பிகள், பெரிய நம்பி ஆகியோருக்கும் இந்த
வரதராஜப் பெருமாளுக்கும் உள்ள சம்பந்தம் பற்றித் தனி நூலொன்றே
எழுதிவிடலாம்.
 


   அன்புடன்

 ஸ்ரீ பா ல சு பி க் ஷ ம்
E.P.I. இராம சுப்பிரமணியன்

6 comments:

  1. காஞ்சிபுரத்தில் உள்ள வைணவத்தலங்கள்

    1.திருக்கச்சி வரதராஜன் 2..அட்டபுயக்கரம்ஆதிகேசவன் 3.திருத்தண்கா(தூப்புல்)தீபப்ரகாசர் - 4.திருவேளுக்கை 5.திருப்பாடகம் (காஞ்)பாண்டவ தூதர் 6.திருநீரகம் (காஞ்)ஜகதீசப்பெருமாள் - 7.நிலாத்திங்கள் (காஞ்)நிலாத்திங்கள்துண்டத்தான்
    8.திரு ஊரகம் (காஞ்)உலகளந்தபெருமாள் -
    9.திருவெக்கா (காஞ்)யதோத்தகாரி
    10..திருக்காரகம் (காஞ்)கருணாகரர் - 11.திருக்கார்வானம் (காஞ்)
    12.திருக்கள்வனூர் (காஞ்)
    13.திருப்பவள வண்ணம்(காஞ்)

    ReplyDelete
  2. அ)
    108 வைணவத்திருத்தலங்களில் கோயில் என்று திருவரங்கத்தையும்,
    திருமலை என்று திருவேங்கடத்தையும், பெருமாள் கோயில் என்று
    இத்தலத்தையும் குறிப்பர். இக்கோவிலின் முதல் பிரகாரத்திற்கு சேனையர்
    கோன் திருமுற்றமென்றும், மூன்றாவது பிரகாரத்திற்கு ஆளவந்தார்
    பிரகாரமென்றும், நான்காவது பிரகாரத்திற்கு ஆழ்வார் திருவீதியெனவும், 5வது
    பிரகாரத்திற்கு மாடவீதி எனவும் பெயர். இந்த பிரகாரத்திற்குள்தான்
    ஸ்ரீஆளவந்தார் இராமானுஜரை முதன் முதலில் கண்டு ஆம் முதல்வனிவன்
    என்றருளினார்.

    *நம்மாழ்வார் தமது திருவாய் மொழியில் அயர்வறு அமரர்கள்
    அதிபதி என்றது இப்பெருமாளைத்தான் என்று பெரியோர்கள் பொருள்
    கூறுவர். இதற்கொப்பவே வேறெங்குமில்லாதவாறு இத்தலத்தில் உள்ள
    நம்மாழ்வார் துயரறு சுடர் அடிதொழுதொழு என் மனனே என்று
    கூறுவதுபோல் ஞான முத்திரையின்றி தம் நெஞ்சில் கை வைத்து
    எழுந்தருளியுள்ளார்.

    *இங்கு நடைபெறும் வைகாசி விசாகக் கருடசேவை மிகப் பிரஸித்தி
    பெற்றதாகும்.

    *இங்கு வாழ்ந்த திருக்கச்சி நம்பிகள் இப்பெருமானுக்கு ஆலவட்ட
    கைங்கர்யம் செய்தார். அதாவது பெருமாளுக்கு வியர்க்கும் என்று (வேர்க்கும்)
    எப்போதும் பெரிய விசிறி கொண்டு விசிறிக் கொண்டேயிருப்பாராம். இந்த
    திருக்கச்சி நம்பியைக் காஞ்சி பூர்ணர் என்றும் மொழிவர்.

    ReplyDelete

  3. இவரிடம் இப்பெருமாள் தினந்தோறும் உரையாடுவாராம். இப்பெருமாளுக்குத்
    தீர்த்த கைங்கர்யம் செய்து கொண்டிருந்த ஸ்ரீஇராமானுஜரை
    ஸ்ரீரங்கத்திற்குத்தந்தருள வேண்டுமென இப்பெருமானிடம் பெரிய நம்பி
    விண்ணப்பிக்க திருக்கச்சி நம்பிகள் மூலமாகவே பதில் கூறி இராமானுஜரை
    திருவரங்கத்திற்கு செல்ல வைத்தார். ஸ்ரீஇராமானுஜரை திருவரங்கத்திற்கு
    தந்தருளியது இந்த வரதர்தான்.

    *யாதவப் பிரகாசருடன் கங்கைக்குச் சென்ற இராமானுஜரை த்ரிவேணி
    ஸங்கமத்தில் நீராடச் செல்லும்போது தீர்த்துக்கட்ட திட்டம் போட்டிருந்தார்
    யாதவ பிரகாசர். இச்சதித் திட்டத்தை தன்னுடன் யாத்திரை வந்த தனது
    சிற்றன்னையின் மகனான கோவிந்தன் மூலம் அறிந்து கொண்ட ராமானுஜர்
    விந்திய மலைக் காட்டிலேயே தங்கிவிட்டார். வழி தவறித் திகைத்து அலைந்த இராமானுஜருக்கு இத்திவ்ய தேசத்து
    பெருமாளும் பிராட்டியுமே, ஒரு வேடுவ வேட்டுவச்சி வேடம் பூண்டு, ஒரே
    இரவில் இராமானுஜரைக் காஞ்சிக்கருகில் இருந்த சாலைக்கிணறு ஓரமாகக்
    கொணர்ந்து விடுத்து தாக சாந்திக்குத் தண்ணீர் கேட்க இராமானுஜர் தீர்த்தம்
    கொண்டு வந்து கொடுக்க வந்தபோது அவ்விருவரும் மறைய சற்றே திரும்பி
    பார்த்த ராமானுஜர் சற்றுத் தூரத்தில் புண்யகோடி விமானத்தையும், காஞ்சி
    மாநகர் நோக்கிச் செல்லும் மக்களையும் கண்டு பெரிதும் வியந்து தம்
    பொருட்டு எம்பெருமான் வேடுவ வடிவங்கொண்டு வந்ததை யெண்ணி
    கண்ணீர் உகுத்தவராய் வைய மாளிகை அடைந்தார்.

    நடந்த வ்ருத்தாந்தங்களைத் தம் தாயாரிடம் கூறி, அவரது
    அறிவுரையின்படி திருக்கச்சி நம்பிகளை ஆச்சாரியனாக ஏற்று அன்றுமுதல்
    சாலைக் கிணற்றிலிருந்து வரதராஜ பெருமாளுக்கு திருமஞ்சனத்திற்குத் தீர்த்தம்
    கொணர்ந்து கொடுக்கும் கைங்கர்யத்தை மேற்கொண்டார்.

    இன்றளவும் இக்கிணற்றின் தீர்த்தமே கச்சி வரதனுக்கு திருமஞ்சன
    தீர்த்தமாக எடுத்து வரப்படுகிறது. பெருமாள் இராமானுஜரை மீட்டுக்
    கொணர்ந்த நாள் இன்றும் உற்சவதினமாகக் கொண்டாடப்படுகிறது.

    ReplyDelete
  4. இந்த காஞ்சி பூர்ணரை ஆச்சார்யராகக் கொண்ட இராமானுஜர்
    அவரிடம் கீழ்க்காணும் நான்கு கேள்விகளைத் தம் பொருட்டுக் கேட்டார்.

    1. உபாயங்களில் எது நல்லது
    2. மோட்சம் அடைவதற்கு முன் அந்திமஸ்ருதி வேண்டுவது
    எப்போது
    3. எந்த ஜென்மத்தில் மோட்சமடைவது
    4. எந்த ஆச்சார்யரை நான் ஏற்றுக் கொள்வது

    இக்கேள்விகளை இராமானுஜர் கேட்பதாக திருக்கச்சி நம்பிகள்
    தேவப்பெருமாளான வரதரிடம் கேட்க அவர் 6 வார்த்தைகள் பதில்
    கூறுகிறார்.

    1. அஹம் மேவபரம்தத்வம்

    நானே, ஸ்ரீமந் நாராயணனே உலகிற்கும், உலக காரணிகட்கும்
    தத்துவமாய் விளங்கும் பரம்பொருள்

    2. தர்சனம் பேத ஏவச

    ஜீவாத்மா, பரமாத்மா (ஜீவன்-ஈஸ்வரன்) இரண்டும் வெவ்வேறானவை.

    3. உபாயேஷ் பரப்த்திய ஸ்யாத்

    பகவானை அடைய (மோட்சம் அடைய) சரணாகதியே சிறந்தவழி.

    4. அந்திமஸ்மருதி வர்ஜனம்

    அந்திமகாலத்தில் பெருமாளை நினைக்க முடியாவிட்டால் தவறில்லை.

    5. தேக வஸானே முக்தில் ஸ்யாத

    என்னை உபாயமாகக் கொண்ட இத்தகைய பக்தர்கட்கு இந்தவுடல்
    கழிந்தவாறே (இப்பிறவி முடிந்ததும்) மோட்சம் நானே அருளுகிறேன்.

    6. பூர்ணசச்யார்ய ஸமாச்ரய

    நற்குண பண்டிதராய் இருக்கும் மகா புருஷரான பெரிய நம்பியை
    ஆச்சார்யராக ஏற்றுக் கொள்ளத்தக்கது.

    இவ்விதம் திருமங்கையாழ்வாரிடம் திருநறையூரான் ஈடுபாடு
    கொண்டதுபோல ஸ்ரீஇராமானுஜரிடம் வரதராஜன் ஈடுபாடு கொண்டு அவருக்கு
    வழிகாட்டினார்.

    ReplyDelete
  5. புஷ்ப மண்டபம், போக மண்டபம், தியாக மண்டபம் என்று மூன்று
    திவ்ய தேசங்கள் வர்ணிக்கப்படுகின்றன. புஷ்ப மண்டபம் என்பது திருவேங்கடம்
    ‘சிந்து பூ மகிழ் திருவேங்கடம்’ என்பது நம்மாழ்வார் திருவாக்கு. போக
    மண்டபம் என்பது திருவரங்கம். எம்பெருமான் திருவரங்கத்தில் பக்தர்கட்கு
    போக்யமாய் இருப்பதாலும், சயன திருக்கோலத்தில் ஒரு வகையான போக
    மண்டபம் ஆயிற்று ஸ்ரீரங்கம். தியாக மண்டபம் எனப்படுவது இத்தலமாகும்.
    தனக்கே திருமஞ்சன தீர்த்தம் கொணரும் கைங்கர்யத்தை மேற்கொண்டிருந்த
    இராமானுஜரை ஸ்ரீரங்கத்திற்கு ஆளவந்தார்க்கு அடுத்தபடியாக வைணவத்
    தலைமையேற்க தியாகம் செய்து அனுப்பி வைத்ததால் இத்தலத்திற்கு தியாக
    மண்டபம் என்றும் பெயருண்டாயிற்று.

    *ஸ்ரீஇராமானுஜருக்காக சோழ மன்னனிடம் கண்களையிழந்த
    கூரத்தாழ்வான் அவர் நியமனப்படியே வரதராஜ ஸ்தவம் அருளிச் செய்து
    இழந்த தம் கண்களைப் பெற்றது இத்தலத்தில் தான்.

    இப்பெருமானைத் திருக்கச்சி நம்பிகள் தேவராஜஷ்டகம் என்னும்
    ஸ்தோத்திரத்தாலும், வேதாந்த தேசிகர் வரதராஜ பஞ்சாசத் என்னும்
    ஸ்தோத்திரத்தாலும், மணவாள மாமுனிகள் தேவராஜ மங்களம் என்னும்
    ஸ்தோத்திரத்தாலும் தேவராஜ ஸ்துதி செய்துள்ளனர்.

    *மணவாள மாமுனிகள் இங்கு அழகிய மணவாள ஜீயர் ஒருவரை
    நியமனம் செய்திருந்தார்.

    *முஸ்லீம்களின் படையெடுப்பு நிகழ்ந்தபோது இங்குள்ள உற்சவரை
    கி.பி. 1688இல் திருச்சி உடையார் பாளையத்தில் பாதுகாத்து வைத்திருந்தனர்.
    1710இல் ஆத்தான் ஜீயர் தம் சீடர் ராஜா தோடர்மாலின் உதவியுடன்
    இப்பெருமாளை மீண்டும் காஞ்சிக்கே கொணர்ந்தார். இதனால் இக்கோவிலின்
    நிர்வாகம் ஆத்தான் ஜீயரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதை விவரிக்கும்
    கல்வெட்டு ஒன்று தாயார் சன்னதியின் முகப்பிலேயே உள்ளது. இங்கு ராஜா
    தோடர்மாலுக்கும் சிலை உண்டு. இப்பெருமானை மீட்டுக் கொணர்ந்த
    தினமான பங்குனி உத்திரட்டாதி தினம் உடையார்பாளைய உத்ஸவம் என்ற
    பெயராலேயே இன்றும் நடைபெறுகிறது

    ReplyDelete
  6. வைணவத்திற்கு அளவிலடங்காத் தொண்டு செய்த வைணவப்
    பெருந்தகை மாமேதை, பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியார்
    சுவாமிகள் இங்கிருந்து ஆற்றிய தொண்டு அளவிடற்கரியது.

    *இத்தலத்தின் கிழக்கு வாசலுக்கு எதிரில் செல்லும் வீதியில்
    இராமானுஜர் தமது இளமைக்காலத்தைச் செலவிட்ட திருமாளிகை இன்றும்
    உள்ளது. இதற்கு உடையவர் திருமாளிகை என்று பெயர். தேவப்பெருமாள்
    இவ்வழியில் எழுந்தருளும் நாட்களில் இங்கு மண்டகப்படி உண்டு.

    *எம்பெருமான் இங்கு புண்யகோடி விமானத்துடன் எழுந்தருளியதால்
    இங்கு செய்யப்படும் ஒரு புண்ணியமானது கோடியாக விருத்தியடைகிறது
    என்பது ஐதீஹம்.

    *பாரதம் பாடிய பெருந்தேவனார் சங்ககாலப் புலவர், சங்க
    காலத்திலேயே இத்தலம் சிறப்புற்றிருந்ததை,


    ‘தேனோங்கு நீழற் திருவேங்கட மென்னும்
    வானோங்கு சோலை மலையென்றும்-தானோங்குந்
    தென்னரங்க மென்றுந் திருவத்தியூர் என்றுஞ்
    சொன்னார்க்கு உண்டோ துயர்’
    26)நூற்றெட்டுத் திருப்பதியந்தாதியில்

    பொருளாசை மண்ணாசை பூங்குழலார் போகத்
    திருளாசை சிந்தித்திராதே - அருளாளன்
    கச்சித் திருப்பதியாம் அத்தியூர்க் கண்ணன்தாள்
    இச்சித் திருப்பதி யாமென்று

    என்கிறார் பிள்ளைப் பெருமாளையங்கார்.

    ReplyDelete