🔶 திருமாலிருஞ்சோலை மலை யென்னும் அழகர் கோயில் ஸ்தல மான்மியமும் ஆழ்வாராதிகள் பிரபந்தமும் 🔶
🔶 பதிப்பாசிரியர்:- ஸ்ரீமான் வி.என்.இராகவக்கோன்
🔶 ஆண்டு:- 1908
🔶 விலை:- 8 அணா
🔷 அழகர் கோயிலைப் பற்றி வராக புராணம், பிரம்மாண்ட புராணம் ஆக்னேய
புராணம் போன்றன விவரித்துக் கூறுகின்றது. வராக புராணத்தில் "விருஷ பாத்திரி
மகாத்மியம்" என்னும் தலைப்பில் இத்தலம் பற்றி பரக்கப் பேசப்பட்டுள்ளது.
"ரிஷபம்" என்றால் காளை. இந்தமலையினைச் சுற்றியுள்ள மலைகள் யாவும் பசுவினைப் போலவும் இந்த மலை மட்டுமே காளை போன்றும் தோன்றுவதால்
இதற்கு "ரிஷபாத்திரி" என்ற பெயர் ஏற்பட்டதென்பர்.
🔷 பழம்பெருமை கொண்ட இத்தலத்திற்கான தலபுராண மகாத்மிய நூல் மதுரை வடக்கு மாசி வீதி இராமாயணச்சாவடி தெரு திரு.வெ.ரா.நீலமேகக்கோனார் மகன் திரு.இராகவக்கோனார் அவர்களால் கற்றறிந்த சான்றோர்கள் துணைக் கொண்டு ஸ்ரீராமச்சந்திர விலாச அச்சியந்திர சாலையில் 1908 டிசம்பரில் பதிப்பிக்கப்பட்டது.
🔷 இந்நூலானது திருமாலிருஞ்சோலைக்கான ஆழ்வார்களின் பாசுரங்களில் தொடங்குகிறது. பின்பு வரும் ஸ்தல புராணமானது பத்து அத்தியாயங்கள் மட்டும் உள்ளது. 1942ம் ஆண்டில் வெளிவந்த ஸ்ரீகள்ளழகர் திருக்கோயில் தேவஸ்தான வெளியீடான ஸ்தல புராணமானது 12 அத்தியாயங்களை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புடன்
ஸ்ரீ பா ல சு பி க் ஷ ம்
E.P.I. இராம சுப்பிரமணியன்
🔷 🔷 🔷 மேற்கண்ட நூலினை Pdf ஆக பெறவேண்டிய இணையதளம்:-
அழகர் கோயில் ஸ்தல மான்மியம் :
🔷 பதிவேற்றியது: ஸ்ரீ பா ல சு பி க் ஷ ம்
E.P.I.இராமசுப்பிரமணியன்
https://archive.org/details/alakarkooyilstala_maanmiyam
MediaFire link: அழகர் கோயில் ஸ்தல மான்மியம்.pdf
https://www.mediafire.com/download/xw25s9oy4m40ax9
This comment has been removed by the author.
ReplyDelete